sandhara.lk

THE SANDHARA STORY

Sandhara is the social enterprise arm of the Right to Life Human Rights Centre.

For over two decades, Right to Life has been on the frontlines, defending human rights and strengthening democracy in Sri Lanka. Every service you use at Sandhara, every product you purchase, generates vital funds to keep that mission alive and independent.

Sandhara is also your gateway to knowledge. We act as a vibrant hub, connecting human rights defenders, activists, and the public with essential education, training, and information on social entrepreneurship.

Choose Sandhara. Support the change. Discover a space designed for connection, creativity, and conscience in the heart of Colombo.

සන්ධාර කතා පුවත

සන්ධාර යනු රයිට් ටු ලයිෆ් මානව හිමිකම් මධ්‍යස්ථානයේ සාඩම්බර සමාජ ව්‍යවසාය අංශයයි.

දශක දෙකකට අධික කාලයක් පුරා, ශ්‍රී ලංකාවේ මානව හිමිකම් ආරක්ෂා කිරීම සහ ප්‍රජාතන්ත්‍රවාදය ශක්තිමත් කිරීම උදෙසා රයිට් ටු ලයිෆ් ආයතනය පෙරමුණ ගෙන කටයුතු කරයි. සන්ධාර වෙතින් ඔබ ලබාගන්නා සෑම සේවාවක්ම සහ ඔබ මිලදී ගන්නා සෑම භාණ්ඩයක්ම, එම මෙහෙවර සජීවීව සහ ස්වාධීනව පවත්වාගෙන යාම සඳහා අත්‍යවශ්‍ය අරමුදල් උත්පාදනය කරයි.

සන්ධාර යනු ඔබේ සමාජ ව්‍යවසායකත්ව දැනුමේ ද කවුළුවයි. අපි සක්‍රිය කේන්ද්‍රස්ථානයක් ලෙස ක්‍රියා කරමින් සමාජ ව්‍යවසායකත්වය පිළිබඳ අත්‍යවශ්‍ය අධ්‍යාපනය, පුහුණුව සහ තොරතුරු සමග මානව හිමිකම් ආරක්ෂකවරුන්, සමාජ ක්‍රියාකාරිකයන් සහ මහජනතාව සම්බන්ධ කරන්නෙමු.

සන්ධාර තෝරාගන්න. එම වෙනසට සහය වන්න. සම්බන්ධතාව, නිර්මාණශීලීත්වය සහ හෘදය සාක්ෂිය මුල් කරගනිමින් කොළඹ නගරයේ හදවත බඳු ස්ථානයක නිර්මාණය වූ අවකාශයක අත්දැකීම ලබන්න.

சந்தாரா (Sandhara) என்றால் என்ன?

 நமது நாடும் அரசியல் கட்டமைப்பும் மேலும் முன்னேற்றமடைவதையே நாம் அனைவரும் விரும்புகிறோம். நாட்டின் ஆட்சிமுறை மேலும் முறைப்படுத்தப்பட வேண்டியதுடன், மக்கள் ஒழுக்கமான, ஆக்கபூர்வமான பிரஜைகளாக மாற வேண்டும், அத்துடன் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது விருப்பமாகும்.

சமூக அபிவிருத்தியை பொறுத்தவரையில், சிவில் சமூகம் ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவையும் உரையாடலையும் பேணிப் பாதுகாக்கவும், மக்களிடையே புதிய யோசனைகளை உருவாக்கவும், கொள்கை மாற்றங்களில் செல்வாக்கு செலுத்த அல்லது பரிந்துரைக்கவும், அவசியமானால் புதிய ஆட்சி முறைகளை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைய முடியும். சிவில் சமூகம் என்பது அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் கருவியாகச் செயற்படும் குடிமைச் செயற்பாடுகளை வசதிப்படுத்துகின்ற ஒரு சுதந்திரமான சக்தியாகும்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பது நாட்டுடன் நேரடியாக இணைக்கப்படாத ஒரு சுதந்திரமான சிவில் சமூகப் பொறிமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காக பரப்புரையாற்றல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நேர்மறையான தகவல் பரிமாற்றத்தை வளர்த்தல் போன்ற விடயங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத வகிபங்கை வகிக்கின்றன.

தொழில்முறை ரீதியிலான பரப்புரையாற்றல் என்பது ஒரு பாரிய பணியாகும். உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கொள்கைகள் மற்றும் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், பல்வேறு துறைகளில் விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் அதேவேளையில் தொடர்ச்சியான மற்றும் நீண்டகாலப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது கொள்கை விருத்தி, தொடர்பாடல், கல்வி மற்றும் நிறுவனச் செயற்பாடுகளுக்கு தொழில்வல்லுநர்களின் சேவைகள் அவசியமாகின்ற ஒரு தொழில்முறைசார் முயற்சியாகும். நிறுவன நிர்வாகம், முகாமைத்துவம், நிதி திரட்டல், கணக்கு பேணுகை மற்றும் கணக்காய்வு போன்ற ஏராளமான தொழில்முறைசார் பணிகள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளன.

இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் ஒரு நிலை நீண்டகாலமாக உருவாகியுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சமூகத்தின் கொள்கைகள் மாறும்போது, இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இலங்கையர்கள் கொடையளிக்கும் குணத்தில் மிகவும் முன்னணியில் உள்ள ஒரு தேசத்தவராவர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களைப் போலவே சிவில் சமூகத்தையும் பாதுகாக்கும் திறன் இலங்கை பிரஜைகளுக்கு உண்டு. அதற்காக, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குள்ளேயே ஒரு உருமாற்றம் தேவைப்படுகிறது. இந்த நிறுவனங்கள் இயங்கும் பொருளாதார மற்றும் கலாச்சார சூழல் மாற வேண்டும் என்பதே ‘வாழ்வுரிமைக்கான மனித உரிமைகள் நிலையத்தின்’ நிலைப்பாடாகும்.

நிலைபேண்தகு தன்மை குறித்த நீண்ட உரையாடல் நமக்கிடையே நடைபெற்று வருகின்றது. சந்தாரா (Sandhara) சமூக நிறுவனத்தின் ஆரம்பமானது, இந்த உரையாடல் செயலாக மாற்றப்பட்ட தருணமாகும்.

சந்தாரா என்பது கொழும்பு 05, தலக்கொட்டுவ கார்டன்ஸ், 4வது ஒழுங்கையில் அமைந்துள்ள எமது தலைமையகத்தை மையமாகக் கொண்ட ஒரு வணிகச் செயன்முறையாகும். இதன் மூலம் ஈட்டப்படும் இலாபத்தை, ‘வாழ்வுரிமைக்கான மனித உரிமைகள் நிலையத்தினால்’ நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்படும் மனித உரிமைகள் முதலுதவி நிலையங்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களின் வலையமைப்பைப் பராமரிப்பதற்காக மீண்டும் முதலீடு செய்வதே இதன் நோக்கமாகும். எங்களைப் போலவே எமது மனித உரிமைப் பாதுகாவலர்களின் வலையமைப்பும் சமூகத் தொழில்முயற்சியாண்மை செயற்திட்டங்களை ஆரம்பித்து வருகின்றது.

நீங்கள் சந்தாராவுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பங்களிப்பாகும். மேலும், நாம் பாடுபடும் இந்த மாற்றத்திற்கான ஒரு ஊக்குவிப்பாகும்.

இது எமக்கொரு புதிய ஆரம்பம்; ஒரு உண்மையான பரீட்சார்த்த முயற்சி. இதனை வெற்றிகரமாக்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இதற்கு உங்களது ஆதரவு எங்களுக்கு அவசியமாகும். இந்த உரையாடலையும் செயற்பாட்டையும் மேலும் விரிவுபடுத்த ஒன்றிணைவோம்.

Scroll to Top